இன்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியக் கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் முல்/மாங்குளம் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் முல்/மல்லாவி மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறநாய்வு போட்டியிலே பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.
விளையாட்டுப் போட்டி நிகழ்விலே கலந்துகொண்ட கெளரவ வைத்தியக் கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் முல்/மாங்குளம் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் முல்/மல்லாவி மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளின் மைதான புனரமைப்பிற்காக தலா பத்து லட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்/மாங்குளம் ம.ம.வி மைதான புனரமைப்பிற்கு பத்து இலட்சம் - M.P சி.சிவமோகன் நிதி ஒதுக்கீடு!
Reviewed by Mankulam News
on
1/30/2019 09:11:00 pm
Rating:
No comments: