Seo Services

"செயற்பட்டு மகிழ்வோம்-2019" - மு/பனிக்கன்குளம் அ.த.க பாடசாலை - படங்கள் இணைப்பு



மு/பனிக்கன்குளம் அ.த.க பாடசாலையின் 2019ம் ஆண்டிற்கான "செயற்பட்டு மகிழ்வோம்" நிகழ்வுகள் நேற்று செவ்வாய்க்கிழமை (2019/01/29) பாடசாலை மைதானத்தில் அதிபர் திரு தயாபரன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராசா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கெளரவ திரு.செ.பிறேமகாந் அவர்களும் , முன்னாள் வடக்கு மாகாண  சபை உறுப்பினர் திரு.ஆ.புவணேஸ்வரன் அவர்களும் பங்குபற்றியிருந்தனர்.

வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் கெளரவ திரு.செ.பிறேமகாந் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாக 11 மாணவர்களால் வினேதவிடை நிகழ்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்கள் :- முகநூல்


"செயற்பட்டு மகிழ்வோம்-2019" - மு/பனிக்கன்குளம் அ.த.க பாடசாலை - படங்கள் இணைப்பு "செயற்பட்டு மகிழ்வோம்-2019" - மு/பனிக்கன்குளம் அ.த.க பாடசாலை - படங்கள் இணைப்பு Reviewed by Mankulam News on 1/30/2019 02:18:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.