மாங்குளம் துணுக்காய் வீதியில் வசிக்கும் திருமதி
செல்வரத்தினம் விஜயலட்சுமி அவர்கள், யுத்தத்தில் கணவனையும் , மகனையும் இழந்த நிலையில் வயதான தாயாரையும் , மாற்றுத் திறனாளியான தனது மூத்த உடன் பிறந்த சகோதரனையும் வைத்து கூலி வேலை செய்து பராமரித்து வருகின்றார்.
இவரின் நிலையை அறிந்து மேலதிக வருமானத்தினை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கோடு அவர்களுக்காக இரண்டு வளர்ப்பு ஆடுகளை "வன்னி விழா 2018" நிகழ்வு நிதியில் இருந்து வழங்கப்பட்டது.
இவர்களுக்கான வாழ்வாதார உதவியினை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு க . பரந்தாமன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அமைய நிர்வாக சபை உறுப்பினர் திரு செ. செல்வக்குமாரன் அவர்களும், கிராம அலுவலகர் திரு.சி சிவகாந்தன் அவர்களும், மற்றும் அப்பகுதி மகளீர் அமைப்பு உறுப்பினர் திருமதி செல்வி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நன்றிகள்
வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம்-கனடா 416-644 1113
"வன்னி விழா 2018" - நிதியினூடாக வாழ்வாதார உதவி!
Reviewed by Mankulam News
on
1/12/2019 04:18:00 pm
Rating:
No comments: