முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஆண்டு இடம் பெற்ற வெள்ள இடரினால் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுகளே அதிகமாக பாதிப்புக்குள்ளாகியிருந்தது.
இது தொடர்பிலான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளையும் பாலங்களையும் சீரமைப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்புப் பிரதேச சபைக்குட்பட்ட 120 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் சேதமடைந்துள்ளதுடன், 7 பாலங்களும் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைப்பதற்கு ரூபா 230 மில்லியன் தேவைப்படுகின்றது. இந்தக் கோரிக்கை முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஊடாக இடர் முகாமைத்துவ அமைச்சுக்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் திரு செ.பிறேமகாந் தெரிவித்துள்ளர்
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளை சீர்செய்வதற்கு 230 மில்லியன் ரூபா தேவை!
Reviewed by Mankulam News
on
1/13/2019 05:03:00 pm
Rating:
No comments: