மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மருத்துவ புணர்வாழ்வு நிலைய கட்டடத்திக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நடைபெற்றது......!!!
வடக்கு மாகாணத்திற்கான மூலோபாய சுகாதார அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படையில் நெதர்லாந்து நாட்டின் நிதி உதவி மற்றும் இலகுகடன் அடிப்படையில் பெறப்பட்ட 12,000 மில்லியன் இலங்கை ரூபா நிதியினூடாக வைத்தியத்துறையில் பாரிய அபிவிருத்திகள் இடம்பெறவுள்ளது.
அதனடிப்படையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வடக்கு மாகாணத்திற்கான மருத்துவ புணர்வாழ்வு நிலைய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் அமைச்சர் ராஜித சேனரத்ன , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் , வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வட மாகாணத்திற்கு ஒரு வருடத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் 4 மடங்கினையே நெதர்லாந்து வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் வடக்கிலே நாற்பத்தைந்தாயிரம் (45,000) பயனாளிகளுக்கு மேல் பயன் பெறுவார்கள் என்றும் இலங்கையில் அமைக்கப்படும் முதலாவது மருத்துவ புணர்வாழ்வு நிலையம் இது என்றும் நிகழ்வில் கலந்துகொண்ட வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் தெரிவித்தார்.
மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மருத்துவ புணர்வாழ்வு நிலைய கட்டடத்திக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நடைபெற்றது......!!!
Reviewed by Mankulam News
on
8/16/2019 02:14:00 pm
Rating:
No comments: