Seo Services
Results for மாங்குளம் வைத்தியசாலை

மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மருத்துவ புணர்வாழ்வு நிலைய கட்டடத்திக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நடைபெற்றது......!!!

8/16/2019 02:14:00 pm

வடக்கு மாகாணத்திற்கான மூலோபாய சுகாதார அபிவிருத்தித் திட்டத்தின் அடிப்படையில் நெதர்லாந்து நாட்டின் நிதி உதவி மற்றும் இலகுகடன் அடிப்படையில் பெறப்பட்ட 12,000 மில்லியன் இலங்கை ரூபா நிதியினூடாக வைத்தியத்துறையில் பாரிய அபிவிருத்திகள் இடம்பெறவுள்ளது.

அதனடிப்படையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வடக்கு மாகாணத்திற்கான மருத்துவ புணர்வாழ்வு நிலைய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்   இன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் அமைச்சர் ராஜித சேனரத்ன , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் , வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வட மாகாணத்திற்கு ஒரு வருடத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் 4 மடங்கினையே நெதர்லாந்து வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் வடக்கிலே நாற்பத்தைந்தாயிரம் (45,000) பயனாளிகளுக்கு மேல் பயன் பெறுவார்கள் என்றும் இலங்கையில் அமைக்கப்படும் முதலாவது மருத்துவ புணர்வாழ்வு நிலையம் இது என்றும் நிகழ்வில் கலந்துகொண்ட வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் தெரிவித்தார்.

































மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மருத்துவ புணர்வாழ்வு நிலைய கட்டடத்திக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நடைபெற்றது......!!! மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மருத்துவ புணர்வாழ்வு நிலைய கட்டடத்திக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நடைபெற்றது......!!! Reviewed by Mankulam News on 8/16/2019 02:14:00 pm Rating: 5

மாங்குளம் உயிரிழை அமைப்பிற்கு வைத்தியர்கள் குழாம் இன்று விஜயம்.......!!!

7/24/2019 05:26:00 pm

இன்று (2019-07-24) உயிரிழை அமைப்பின் அலுவலகத்திற்கு Dr.சத்தியரூபன் (திட்டமிடல் வைத்திய அதிகாரி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முல்லைத்தீவு) அவர்களுடன் Dr.P.சஞ்ஜீபன் VP மற்றும் மாங்குளம் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி Dr.மதுஷங்க மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் உயிரிழை பராமரிப்பு இல்லத்திற்கு சென்று அங்கு உள்ளவர்களை சந்தித்து பராமரிப்பு இல்ல பயனாளிகளின் மருத்துவ தேவைகள் தொடர்பாகவும் ஏனைய நோய்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியதோடு பராமரிப்பு இல்ல பயனாளிகளின் அழுத்தப் புண்களையும் பார்வையிட்டு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர்.
மாங்குளம் உயிரிழை அமைப்பிற்கு வைத்தியர்கள் குழாம் இன்று விஜயம்.......!!! மாங்குளம் உயிரிழை அமைப்பிற்கு வைத்தியர்கள் குழாம் இன்று விஜயம்.......!!! Reviewed by Mankulam News on 7/24/2019 05:26:00 pm Rating: 5

மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு ஆளுநர் திடீர் விஜயம்..........!!!

6/25/2019 03:44:00 pm

மாங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு நேற்று திங்கட்கிழமை (24-06-19) நண்பகல் திடீர் விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வைத்தியசாலையின் நிலைமைகள் குறித்து நேரில் ஆராய்ந்தார்.

இந்த வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்கள் வைத்தியசாலையினை மிகவும் தூய்மையாக வைத்திருப்பதனை பாராட்டிய கௌரவ ஆளுநர் அவர்கள் தொடர்ச்சியாக இதனை பேணுமாறும் வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கேட்டுக் கொண்டார்.



மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு ஆளுநர் திடீர் விஜயம்..........!!! மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு ஆளுநர் திடீர் விஜயம்..........!!! Reviewed by Mankulam News on 6/25/2019 03:44:00 pm Rating: 5
ads 728x90 B
Powered by Blogger.