Seo Services

திருமுறிகண்டியில் புகையிரத வீதியருகே இன்று கவனயீர்பு போராட்டம்.........!!!


திருமுறிகண்டி - அக்கராயன் வீதியை கடந்து செல்லும் புகையிரதக் கடவையை பாதுகாப்பான புகையிரதக் கடவையாக மாற்றக் கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் காணப்படும் சமிக்ஞை விளக்குகள் செயலிழந்து காணப்படுவதாகவும் அருகில் திருமுறிகண்டி இந்து வித்தியாலயம் காணப்படுவதனையும் குறிப்பிட்ட மக்கள் பாதுகாப்புக்கடவையொன்றை அமைக்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர் கவனயீர்ப்பு போராட்டத்திலே புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் , கரைச்சி பிரதேச சபை தவிசாளர் , கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்திலே போக்குவரத்து மற்றும் சிவில் பாதுகாப்பு அமைச்சருக்கு மகஜர் ஒன்றும் அனுப்பப்பட்டது.




திருமுறிகண்டியில் புகையிரத வீதியருகே இன்று கவனயீர்பு போராட்டம்.........!!! திருமுறிகண்டியில் புகையிரத வீதியருகே இன்று கவனயீர்பு போராட்டம்.........!!! Reviewed by Mankulam News on 7/20/2019 04:23:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.