மாங்குளம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இன்றுவரை திறக்கப்படவில்லை!
முல்லைத்தீவு - மாங்குளம், பொதுச்சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டபேருந்து தரிப்பு நிலையம், ஆறுமாதங்கள் கடந்த நிலையிலும் இன்றுவரை, திறக்கப்படவில்லை.
வடமாகாணசபையின் நிதி ஒதுக்கீட்டில், குறித்த பஸ் தரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, நிறைவுற்றிருக்கும் நிலையில் ஆறுமாதங்களாகியும் இன்றுவரை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவில்லை.
இந்ந பேருந்து தரிப்பு நிலையம் திறக்கப்படாததால், மக்கள் இன்றும் பேருந்துகளுக்காக வீதியோரங்களில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை மாங்குளம் பொதுச் சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த, பேருந்து தரிப்பு நிலையம் திறக்கப்பட்டால் சந்தை வியாபாரமும் பலமடங்கு பெருகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே உரிய அதிகாரிகள் இந்த பேருந்து தரிப்பு நிலையத்தினைத் திறந்து மக்கள் பாவனைக்கு விடுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாங்குளம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் இன்றுவரை திறக்கப்படவில்லை!
Reviewed by Mankulam News
on
7/04/2019 06:09:00 pm
Rating:
No comments: