Seo Services

முல்/மாங்குளம் மத்திய மகா வித்தியாலத்தில் விசேட பாதுகாப்பு குழு அமைப்பு...........!!!!


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக முல்லை மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட  மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது , பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தின் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட கலந்துரையாடல் நேற்று (2019-05-03) வெள்ளிக்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் உயர் திரு த.யோகானந்தராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் போலீசார் , இராணுவத்தினர் , கிராம அலுவலகர் , கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் , அயல் பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் உட்பட பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது பாடசாலை பாதுகாப்பிற்காக குழுக்கள் அமைக்கப்பட்டதுடன் அக் குழுக்களின் ஊடாக பாடசாலைக்குள் நுழையும் அனைவரையும் பரிசோதனை செய்யப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.




முல்/மாங்குளம் மத்திய மகா வித்தியாலத்தில் விசேட பாதுகாப்பு குழு அமைப்பு...........!!!! முல்/மாங்குளம் மத்திய மகா வித்தியாலத்தில் விசேட பாதுகாப்பு குழு அமைப்பு...........!!!! Reviewed by S.DilaxShan on 5/04/2019 03:38:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.