
சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு மற்றும் வயல் விழா முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மாவடட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பூ.உகநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், விவசாய திணைக்களத்தினால் செய்கை பண்ணப்படுகின்ற விவசாய உற்பத்திகள், நவீன இயந்திரங்களின் பயன்பாடுகள், வறடசியில் பயிர்கள் பராமரிக்கும் முறை தொடர்பில் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து சிறந்த வீட்டு தோட்ட செய்கையாளர்கள், சிறந்த சேதன செய்கையாளர்கள், சிறந்த நிலக்கடலை செய்கையாளர்கள், சிறந்த உயர் அடர்த்தி முறையிலான மாமர செய்கையாளர்கள், சிறந்த வர்த்தக ரீதியிலான பயிற்செய்கை உற்பத்தியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
முல்லைத்தீவில் விவசாயிகள் கெளரவிப்பு மற்றும் வயல் விழா..........!!!!!
Reviewed by Mankulam News
on
5/25/2019 09:15:00 pm
Rating:

No comments: