2019 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சரத் பி.பூஜித தெரிவித்துள்ளார்.சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் அரச ஊழியர்கள், தங்களின் விண்ணப்பங்களை கிராம உத்தியோ கத்தரிடம் உறுதிப்படுத்த இயலாத பட்சத்தில், தங்களின் நிறுவனத் தலைவரிடம் உறுதி செய்ய முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.இந்த விடயம் தொடர்பான மேலதிகத் தகவல்களை 1911 என்ற துரித தொலைபேசி இலக்கம் அல்லது 011 2 784 208 அல்லது 011 2 784 537 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாக அறிந்துகொள்ள முடியும்.
இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத்திகதி நீடிப்பு......!!!!!
Reviewed by Mankulam News
on
5/22/2019 09:03:00 pm
Rating:

No comments: