Seo Services

முல்லை மாவட்டத்தின் 4 பிரதேச சபை உறுப்பினர்களுடனான ஆளுநரின் சந்திப்பு நேற்று நடைபெற்றது.........!!!


முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளினதும் உறுப்பினர்களுக்கும் கௌரவ ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (21) முல்லைத்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. 

யுத்தத்திற்கு முகம்கொடுத்த மாவட்டமாக காணப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்களுடைய உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவது தொடர்பிலும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும்  இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

மக்கள் பிரதிநிதிகளாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேச சபை உறுப்பினர்கள் தமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒற்றுமையாக  அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்று கௌரவ ஆளுநர் அவர்கள் பிரதேச சபை உறுப்பினர்களிடம் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொண்டார். 

ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் அவர்களும், வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி சரஸ்வதி மோகன்தாஸ் அவர்களும் மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் டிரஞ்சன் உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
முல்லை மாவட்டத்தின் 4 பிரதேச சபை உறுப்பினர்களுடனான ஆளுநரின் சந்திப்பு நேற்று நடைபெற்றது.........!!! முல்லை மாவட்டத்தின் 4 பிரதேச சபை உறுப்பினர்களுடனான ஆளுநரின் சந்திப்பு நேற்று நடைபெற்றது.........!!! Reviewed by Mankulam News on 5/22/2019 08:13:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.