முல்/மாங்குளம் மத்திய மகா வித்தியாலயத்தில் பொலிசாரினால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான விசேட கலந்துரையாடல் இன்று (2019-05-15) புதன்கிழமை பாடசாலையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலிலே தினமும் காலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கும் போது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனையிடுவார்கள் என்றும் இங்கு கூறப்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு மாணவர்கள் வருகைதரும் போது கற்றலுக்கு தேவையற்ற பொருட்களை கொண்டு வர வேண்டாம் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பல விடயங்களை மாணவர்களுக்கு பொலிசார் விளக்கியிருந்தனர்.
இக் கலந்துரையாடலிலே பொலிசார், பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போன்றோரும் கலந்துகொண்டனர்.
முல்/மாங்குளம் ம.ம.வி - பொலிசார் மணவர்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.......!!!!
Reviewed by Mankulam News
on
5/15/2019 11:17:00 pm
Rating:

No comments: