முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கிராமத்தில் கடந்த 10.05.2019 அன்று மாலை மழையுடன் கூடிய காற்று வீசியது.
கடும் காற்று காரணமாக 22 நிரந்தர மற்றும் தற்காலிக வீடுகள் சேதமடைந்தன. இதில் 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.
இந்த குடும்பங்களின் நிலையினை கருத்தில் கொண்டு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட கிளையினரால் நிவாரன உதவி பொருட்கள் 11.05.2019 அன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
புயல் தாகத்தினால் பாதிகக்ப்பட்ட இடத்துக்கு நேரடியாக சென்ற இலங்கை செஞ்சிலுவை சங்க அனர்த்த பதிலிறுப்பு குழு , அனர்த்த முகாமைத்துவ பிரிவு , ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அலுவலர்கள் ஏற்பட்ட இழப்புக்களை மதிப்பீடு செய்ததுடன் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் உடனடி நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டது.
நகல் :- தாரகம் இணையத்தளம்
கடும் காற்றினால் சேதமடைந்த வீட்டு உரிமையாளர்களுக்கு உதவி..........!!!!!
Reviewed by S.DilaxShan
on
5/13/2019 02:54:00 pm
Rating:

No comments: