உயிரிழை பயனாளிகளின்" பிள்ளைகளுக்கு கல்வி "உதவித் திட்டம்-2019" நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது........!!
லிபாரா பவுன்டேசன் - உயிரிழை அமைப்பின் பங்காளித்துவத்துவத்துடன் லிபாராவின் முழுமையான நிதி அனுசரணையுடன் நடைமுறைப்படுத்துகின்ற உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர் அமைப்பின் பயனாளிகளின் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கான "கல்வி உதவித் திட்டம் 2019" வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இக் கல்வி உதவித் திட்டத்தின் ஊடாக மாங்குளம் உயிரிழை அமைப்பின் பயனாளிகளின் பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல் , மாலை நேரக் கல்விக்கான காசோலைகள் வழங்குதல் , விசேட கல்விக் கருத்தரங்குகள் மற்றும் மாணவர்களுக்கான விசேட மருத்துவ உதவித் திட்டங்கள் என்பன இத் திட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத் திட்டமானது கடந்த ஏப்ரல் 20 ம் திகதி நடைபெற்றது.
உயிரிழை பயனாளிகளின்" பிள்ளைகளுக்கு கல்வி "உதவித் திட்டம்-2019" நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது........!!
Reviewed by S.DilaxShan
on
5/01/2019 06:54:00 am
Rating:
No comments: