மாங்குளம்- பனிக்கன்குளம் பகுதியில் இன்று இரவு 8 மணியளவில் வீதியில் படுத்துறங்கியவர் மீது டிப்பர் வாகனம் ஏறி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பனிக்கன் குளம் பகுதியில் மதுபோதையில் 35 தொடக்கம் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வீதியில் படுத்திருந்துள்ளார். இந்நிலையில் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் படுத்திருந்தவரின் கால்களின் மீது ஏறியுள்ளது.
இதனால் இரு கால்களும் சிதைந்த நிலையில் வீதியால் சென்றவர்களால் மீட்கப்பட்ட குறித்த நபர் 1990 அம்புலன்ஸ் வண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை.
மாங்குளம் - பனிக்கன்குளத்தில் கோர விபத்து - வீதியில் உறங்கியவர் மீது ஏறிய டிப்பர்.....!!
Reviewed by Mankulam News
on
4/10/2019 10:56:00 pm
Rating:
No comments: