Seo Services

கனடாவில் சமைத்து அசத்தும் இலங்கைப் பெண்......!!!


இலங்கைத் தமிழரான வாணி குணாபாலசுப்ரமணியம் சிறுவயதிலேயே கனடாவுக்கு குடிபெயர்ந்துவிட்டார். தற்போது அவருக்கு 39 வயதாகிவிட்டது.இலங்கையில் பிரபலமாக இருக்கும் உணவு வகைகளை அவரின் தாய் அடிக்கடி சிறுவயதில் சமைத்து கொடுத்த நிலையில், தற்போது எதாவது விஷேட தினத்தில் மட்டுமே அவற்றை வாணி சமைத்து கொடுக்கிறார்.இதையடுத்து மறந்து போன இலங்கையின் பாரம்பரிய உணவுகளை மீண்டும் சமைத்து அதன்மூலம் தமிழர்களை ஒன்றிணைக்க வாணி நினைத்தார்.இந்த நிலையில், லாப நோக்கமற்ற இல்ங்கை – அவுஸ்திரேலியா நிறுவனமான பால்மீரா இலங்கையின் பிரபலமான சமையல் புத்தகம் ‘ஹேண்ட்மேட்’ஐ கடந்த நவம்பரில் கனடாவில் வெளியிட்டது.அத்தோடு புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் உணவு வகைகளை ஒரு நிகழ்வாக சமைக்க பால்மீரா இணைய பக்கத்தில் கோரப்பட்டிருந்தது.இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை தினத்தில் டொரொண்டோவின் நார்த் யார்கில் உள்ள தனது வீட்டில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் புடைசூழ வாணி சமையலுக்கு தயாரானார்.வாணியும் அவர் மைத்துணி கவிதாவும் இலங்கை கோழி கறி உணவை முதலில் சமைக்க முடிவெடுத்தனர்.வாணியின் கணவர் கஜன் சமையலுக்கு தேவையான எலும்பில்லாத கோழியை எடுத்து வந்தார்.

அடுத்து சமைக்க வேண்டிய இறால் கறிக்கு தேவையான பொருட்களையும் வாணி தயாராக வைத்திருந்தார்.வெங்காயம், பூண்டு, மிளகாய் வெந்தய விதைகள், பெருஞ்சீரகம், விதைகள், இஞ்சி, கறிவேப்பிலை, தேங்காய் பால், சுண்ணாம்பு, மற்றும் கறி பொடி ஆகிய பொருட்கள் தயாராக இருந்தன.அப்போது வீட்டு மணி ஒலிக்க வாணியின் தோழி சுகன்யா மூர்த்தி அங்கு வந்தார்.இலங்கையில் பிரபலான பால் இனிப்பு கட்டியை (Milk Toffee) செய்ய தயாராகி அதற்கான வேலையை சுகன்யா மூர்த்தி தொடங்கினார்.அடுத்ததாக கஸ்தூரி சுகுமார் என்ற பெண் இறால் கறி சமைக்க தேவையான மற்ற பொருட்களுடன் முக்கியமாக புதிய இறால்கள் மற்றும் வீட்டில் செய்த தேங்காய் பாலை எடுத்து கொண்டு வாணியின் வீட்டுக்கு வந்தடைந்தார்.

எல்லோருமே தங்களிடம் இருந்த ‘ஹேண்ட்மேட்’ புத்தகத்தை வைத்தே அதில் சொல்லப்பட்டிருந்த முறையில் சமையல் செய்தார்கள்.இதில், சமையல் உணவுகளைப் பற்றி மட்டும் இல்லாமல் உரல், அரிசியை புடைக்கும் முறம், தேங்காய் மூடியில் செய்யப்பட்ட கரண்டிகள் இலங்கையின் பாரம்பரிய வழக்கப்படி எப்படி பயன்படுத்துவது எனவும் எழுதப்பட்டுள்ளது.

தற்போது, இலங்கை சமையலறையில் கூட இதையெல்லாம் பார்க்க முடியாதென வாணி கூறியுள்ளார்.
கனடாவில் சமைத்து அசத்தும் இலங்கைப் பெண்......!!! கனடாவில் சமைத்து அசத்தும் இலங்கைப் பெண்......!!! Reviewed by Mankulam News on 4/19/2019 12:48:00 am Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.