Seo Services

இருள் நிறைந்து காணப்படு்ம் மாங்குளம் ஆதார வைத்தியசாலை.......!!!


முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான நகராக இருக்கின்ற மாங்குளம் நகர்ப்பகுதியில் அமைந்திருக்கின்ற மாங்குளம் ஆதார வைத்தியசாலை ஆனது பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருவதாக தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது நாட்டில் நிலவுகின்ற மின்வெட்டு காரணமாகவும் பாதிப்புகளை சந்தித்துள்ளது

குறிப்பாக நாட்டிலே தற்போது இடம்பெற்று வருகின்ற மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்ற வேளையில் வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி இயங்காத நிலையில் காணப்படுவதால் வைத்தியசாலை இருளில் மூழ்கி கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது இதனால் அங்கு சிகிச்சை பெற வருகின்றவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றவர்கள் அனைவரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அறிய முடிகிறது.

நகரத்தில் இருக்கின்ற இந்த வைத்தியசாலையை நம்பி பல்வேறு கிராம மக்கள் மற்றும் விபத்துகளை எதிர்கொள்கின்ற நிலையில் இந்த வைத்தியசாலை மிக முக்கியமான ஒரு வைத்தியசாலையாக காணப்படுகின்ற நிலையில் இந்த வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்யக் கோரி தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தநிலையில் மின்பிறப்பாக்கி ஒன்று இங்கே இருந்தும் அது இயங்காத நிலையில் இருக்கின்றது. இதனை சரியான முறையில் கவனிக்காத காரணத்தினால் தற்போது இடம்பெற்று வருகின்ற மின் துண்டிப்பு வேளையில் வைத்தியசாலை இருள் சூழ்ந்து காணப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் மின்சாரம் தடைப்படும் வேளையில் மாங்குளம் வைத்தியசாலை மிகவும் இருட்டாக இருக்கும் அதோடு அங்கு சிகிச்சை பெற வருகின்றவர்கள் மிகவும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையும் சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்கும் நிலையும் காணப்படுகின்றது.

எனவே இந்த வைத்தியசாலையின் குறை நிறைகளை மிக விரைவாக நிவர்த்தி செய்யுமாறும் பழுதாகி இருக்கின்ற மின்பிறப்பாக்கியை உரிய முறையில் திருத்தி மின்வெட்டுகள் இடம்பெறுகின்ற நேரத்திலே மக்கள் பயன்படக்கூடிய வகையில் குறிப்பாக A -9 வீதியில் விபத்துக்கள் அதிகம் நடைபெறுகின்ற காரணத்தால் அந்த விபத்துக்கள் வருகின்ற போது வைத்தியசாலை இருளாக இருக்குமாக இருந்தால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் இந்த குறைகளை மிக விரைவில் தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மக்கள் கோருகின்றார்கள்


இருள் நிறைந்து காணப்படு்ம் மாங்குளம் ஆதார வைத்தியசாலை.......!!! இருள் நிறைந்து காணப்படு்ம் மாங்குளம் ஆதார வைத்தியசாலை.......!!! Reviewed by Mankulam News on 4/05/2019 01:27:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.