வவுனியா ஓமந்தை பகுதியில் இரண்டு யானைத் தந்தங்களுடன் சந்தேகநபர் ஒருவரை மாங்குளம் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், ஓமந்தை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
யானைத் தந்தங்கள் வவுனியா மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
யானைத் தந்தங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நெல்வேலிக்குளம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
யானைத் தந்தங்களுடன் சந்தேகநபர் ஒருவர் மாங்குளம் விசேட அதிரடிப்படையினரால் கைது......
Reviewed by Mankulam News
on
3/29/2019 01:56:00 pm
Rating:
Reviewed by Mankulam News
on
3/29/2019 01:56:00 pm
Rating:

No comments: