முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேச செயலக பரிவிற்கு உட்பட்ட அம்பகாமம் கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு ரூபா 8750.00 பெறுமதியான 50 தென்னை மரக்கன்றுகள் நேற்று (2019-03-05) வழங்கப்பட்டது.
இத் தென்னங் கன்றுகளை பொன்மணி அறக்கட்டளையின் ஸ்தாபகர் திரு.கு.முத்துக்குமார் அவர்களால் முதற்கட்டமாக நேற்று (05.03.2019) வழங்கிவைக்கப்பட்டது.
அம்பகாமம் கிராமமானது முல்லைத்தீவு - மாங்குளம் பிரதான வீதியில் இருந்து 8கி.மீ (8km) கிரவல் பாதையூடாக காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது.
130 குடும்பங்கள் அங்கு விவசாயத்தினை தமது பிரதான முயற்சியாக மேற்கொண்டு கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும் ரூபா 23750.00 பெறுமதியான தென்னை மரக்கன்றுகள் ஜேம்ஸ்புரம் , கரடிகுன்று ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 11ம் திகதி வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அம்பகாமம் கிராம சேவையாளர் பிரிவில் வசிப்பவர்களுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன......!!
Reviewed by Mankulam News
on
3/06/2019 02:14:00 pm
Rating:
No comments: