முல்லைத்தீவு துணுக்காய்ப் பிரதேசத்துக்கு உட்பட்ட மல்லாவி பகுதியில் அரச தலைவரின் கிராம சக்தி மக்கள் செயற் திட்டத்தின் கீழ் போதைப் பொருள் ஒழிப்பு கவனவீர்ப்பு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றுக் காலை மல்லாவி துணுக்காய் முதன்மை வீதியில் ஒன்றுகூடிய கிராம மக்கள் முன்மை வீதிஊடாக மங்கை குடியிருப்பு நோக்கி போதை பொருள் பாவனைக்கு எதிரான வசனங்கள் தாங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு இந்த கவனவீர்ப்பு ஊர்வலத்தை முன்னெடுத்தனர்.
மல்லாவி வடக்கு மங்கை குடியிருப்பு கிராம அலுவலகம் வரை சென்றடைந்த ஊர்வலத்தில் மல்லாவி கிராம அலுவலகர் திருமதி.றாஜினி, துணுக்காய் பிரதேச அபிவிருத்தி அலுவலர் ந.தாரகை, மல்லாவி பிராந்திய சுகாதார பணிமனை அதிகாரி அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். போதைப்பொருள் பாவனை தொடர்பிலான விழிப்புணர்வு கருத்துக்களையும் வழங்கியுள்ளார்கள்.
போதைப்பாவனைக்கு எதிராக மல்லாவியில் ஊர்வலம்!!
Reviewed by Mankulam News
on
2/22/2019 08:19:00 pm
Rating:
No comments: