மாங்குளம் வன்னியின் சுவை உணவகம் எதிர்கொள்ளும் பரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தாருங்கள் - கெளரவ டக்ளஸ் எம்.பி யிடம் கோரிக்கை!

மாங்குளம் வன்னியின் சுவை உணவகத்தின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வியபார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு பொருளாதார உதவிகளை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மாங்குளம் பெண்கள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2 ம் திகதி (2019/01/02) மாங்குளம் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்த குறித்த உணவகத்தின் நிர்வாகத்தினரே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர்
மாங்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துவரும் இந்த உணவகம் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கும் மத்தியில் தனது சேவையினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அதன் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்தவும் , வாடிக்கையாளர்களை உள்ளீர்கும் முகமாகவும் குறித்த உணவகத்தை நவீனமயப்படுத்துவதற்கான உணவுகள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் தளபாடங்கள் உள்ளிட்ட பல பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் அவர்கள் கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
இந் நிலையில் குறித்த கோரிக்கைகளை செவிமடுத்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார் தரப்புடன் தொடர்புகொண்டு குறித்த உணவகத்தினதும் பெண்கள் அமைப்பினதும் மேம்பாட்டுக்கான பொருளாதார தேவைப்பாடுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Copy
Lankaone
மாங்குளம் வன்னியின் சுவை உணவகம் எதிர்கொள்ளும் பரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தாருங்கள் - கெளரவ டக்ளஸ் எம்.பி யிடம் கோரிக்கை!
Reviewed by Mankulam News
on
1/07/2019 11:20:00 pm
Rating:
No comments: