Seo Services

மு/சண்முகரட்ணம் வித்தியாலய விளையாட்டுப் போட்டி இன்று (2019/01/25) சிறப்பாக நடைபெற்றது!



மு/சண்முகரட்ணம் வித்தியாலய வருடாந்த இல்ல மெய் வல்லுநர் திறனாய்வானது "செயற்பட்டு மகிழ்வோம்" எனும் தொனிப்பொருளில்  இன்று (2019/01/25) வெள்ளிக்கிழமை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இன்று பிற்பகல் 01 மணியளவில் ஆரம்பமான இந் நிகழ்வில் தலைவராக பாடசாலை முதல்வர் திருமதி.அ.சிறீஸ்கந்தராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விலே பிரதம விருந்தினராக துணுக்காய் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) திருமதி.பிருந்தா ராகவன் அவர்கள் கலந்துகொண்டார்.

இன்று 01 மணியளவில் ஆரம்பமான வேளையிலே முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். பின்பு மங்கள விழக்கேற்றல் நிகழ்வும் நடைபெற்றது. மேலும் தேசியக் கொடி , பாடசாலைக் கொடி மற்றும் இல்லக் கொடிகளும் ஏற்றப்பட்டன.
பின்னர். ஒலிம்பிக் திபம் ஏற்றப்பட்டு வீரர்களால் சத்தியப்பிரமானமும் நிகழ்த்தப்பட்டது.
மேலும் வரவேற்புரை , ஆசியுரை என்பன நிகழ்த்தப்பட்டது.
பின் இல்லங்களின் ஒழுங்குவரிசையில் அணிநடை சிறப்பாக இடம்பெற்றது.
மேலும் ஒருசில விளையாட்டு நிகள்வுகளும் இடம்பெற்றது.

இடைவேளையின் பின் உடற்பயிற்சி சிறப்பாக இடம்பெற்றது. இது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பின்னர் வினோதவிடை , பழைய மாணவர் நிகழ்வு , பெற்றோர் நிகழ்வு,  உத்தியோகஸ்தர் நிகழ்வு போன்றவையும் இடம்பெற்றது.
மேலும் அதிபர் உரை,  பிரதம விருந்தினர் உரை என்பனவும் இடம்பெற்றன.
இறுதியாக வெற்றியீட்டிய வீரர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
பின்பு நன்றியுரையை தொடர்ந்து கொடியிறக்கலுடன் நிகழ்வு நிறைவுற்றது.

விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்


சேரன் இல்லம் முதலிடம்
சோழன் இல்லம் இரண்டாம் இடம்
பாண்டியன் இல்லம் மூன்றாம் இடம்






மு/சண்முகரட்ணம் வித்தியாலய விளையாட்டுப் போட்டி இன்று (2019/01/25) சிறப்பாக நடைபெற்றது! மு/சண்முகரட்ணம் வித்தியாலய விளையாட்டுப் போட்டி இன்று (2019/01/25) சிறப்பாக நடைபெற்றது! Reviewed by Mankulam News on 1/25/2019 10:52:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.