Seo Services
Results for திறப்புவிழா

அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் முல்லைத்தீவில் திறந்து வைப்பு!

6/05/2019 10:56:00 pm


அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலங்க கலுவெவ, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் இணைந்து இதனை திறந்து வைத்தனர்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் கட்டடத் தொகுதியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அலுவலகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இது அரசாங்க தகவல் திணைக்களத்தின் 23வது மாவட்ட அலுவலகமாகும்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் முல்லைத்தீவில் திறந்து வைப்பு! அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் முல்லைத்தீவில் திறந்து வைப்பு! Reviewed by Mankulam News on 6/05/2019 10:56:00 pm Rating: 5

மாங்குளத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு நிலையம் திறப்பு...........!!!!!!

5/28/2019 03:54:00 pm

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு நிலையம் உயிரிழை என அழைக்கப்படும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு நிலையம் மிகச் சிறந்த பாராட்டுதலுக்குரிய முயற்சியாக கடந்த 12-05-2019 மாங்குளத்தில் IMHO USA (International Medical Health Organization, USA) உதவியுடன் புதிதாகக் கட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.
வன்னியில் போரால் பதிக்கப்பட்டு முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோரை பராமரிக்கவென இந்த பராமரிப்பு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை IBC நிறுவனத்தின் தலைவர் திரு .கந்தையா பாஸ்கரன் அவர்கள் அமைத்து வழங்கியுள்ளார் பெருமளவு நிதி செலவில் பல மாத காலமாக முன்னெடுக்கப்பட்ட முயற்ச்சிகளின் பயனாக இந்த இல்லம் அமையப்பெற்றுள்ளது.

மாங்குளம் உயிரிழை அமைப்போடு இணைத்து இந்த பராமரிப்பு நிலையத்தை அமைத்துள்ளனர் .

சமூகத்தோடு இணைந்த வாழ்வியலை முன்னெடுக்க இந்த முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர்களாலும் ஓரளவு முயல முடியும் என்பதை இந்த இல்லம் மூலம்  செயற்ப்படுத்த முடியும் என்று நம்புவோம் .
இப்பதிவில் இணைக்கப்பட்ட படங்கள் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் வலம் வரும் ஆண், பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அவர்களுக்கான இந்தப் பராமரிப்பு நிலையம் மிக அவசியமானதொன்றாக அக்கறையுடன் நிறுவப்பட்டது.































மாங்குளத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு நிலையம் திறப்பு...........!!!!!! மாங்குளத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு நிலையம் திறப்பு...........!!!!!! Reviewed by Mankulam News on 5/28/2019 03:54:00 pm Rating: 5
ads 728x90 B
Powered by Blogger.