Seo Services

மாங்குளத்தில் வீடுகளின் கூரைகள் பறந்தன....!!! மரங்கள் முறிந்து வீழ்ந்தன......!!!


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் நேற்று (2019-07-11)  மாலை வீசிய கடும் காற்று காரணமாக பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக கடும் வறட்சியும் வெப்பமும் நிலவி வந்த நிலையில் இன்று சில இடங்களில் மழை பெய்தது
இந்நிலையில் நேற்று மாலை 04:30 மணியளவில் மாங்குளம் பகுதியில் வீசிய கடும் காற்றினால் வீதிகளில் வீதியோரங்களில் நின்ற மரங்கள் பல முறிந்து விழுந்து வீதியில் போக்குவரத்து தடைப்பட்டது. அத்தோடு மக்களுடைய வாழ்விடங்களில் பயன்தரு மரங்கள் பலவும் நாசமாகியுள்ளன
மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 9 வீடுகளும் தச்சடம்பன் பகுதியில் ஒரு வீடும் புலுமச்சிநாதகுளம் பகுதியில் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் சேதமடைந்த வீடுகளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த அகிலன், மாங்குளம் கிராம அலுவலர் தனபால்ராஜ், அம்பகாமம் பதில் கிராம அலுவலர் ரஞ்சிதகுமார், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு முகுந்தகஜன்,மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மாங்குளத்தில் வீடுகளின் கூரைகள் பறந்தன....!!! மரங்கள் முறிந்து வீழ்ந்தன......!!! மாங்குளத்தில் வீடுகளின் கூரைகள் பறந்தன....!!! மரங்கள் முறிந்து வீழ்ந்தன......!!! Reviewed by Mankulam News on 7/12/2019 08:53:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.