Seo Services

திருமுறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சடலம் மீட்ப்பு...........!!!!!!!


முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமுறுகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வியாபார நிலையத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் உடலுமாக காணப்படுகின்றார்
நேற்று இரவு 08:30 மணியளவில் வியாபார நிலையத்தில் குறித்த நபர் உயிரிழந்த நிலையில் இருப்பதை அவதானித்த அருகிலுள்ள வியாபாரிகள் மாங்குளம் போலீசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாங்குளம் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதோடு தற்போது நீதிபதி அவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வருவதற்காக சென்றிருக்கிறார்கள்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் இந்துபுரம் திருமுறுகண்டியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய ஆறுமுகம் குமாரராஜா என தெரிய வருகிறது
குறித்த பகுதிக்கு தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது
குறித்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் அல்லது கொலை செய்யப்பட்டாரா என்கின்ற பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
திருமுறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சடலம் மீட்ப்பு...........!!!!!!! திருமுறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சடலம் மீட்ப்பு...........!!!!!!! Reviewed by Mankulam News on 6/10/2019 02:23:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.