Seo Services

உயிரிழை பராமரிப்பு இல்ல பயனாளிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபா உதவி வழங்கிவைப்பு......!!

உயிரிழை முள்ளந்தண்டுவடம் பாதிப்புற்றோர் பராமரிப்பு இல்ல பயனாளிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபா உதவி வழங்கிவைப்பு!

பிரான்சு வாழ் திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியைச் சேர்ந்த அருளாணந்தம் ஜெயானந்தன் டிக்சன் (Dickson Jeyanathan) அவர்களது குடும்பத்தின் சார்பில் உயிரிழை பராமரிப்பு இல்லப் பயணாளிகளின் உணவுச் செலவிற்கு முப்பத்து இரண்டாயிரத்து எழுநூறு ரூபா (32,700/-) தொகை பணமாக நேற்று புதன் கிழமை (17/04/2019) வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

ஏ-9 வீதி, மாங்குளத்தில் அமைந்துள்ள உயிரிழை அமைப்பின் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் திரு சிறிகரன் அவர்களிடம் குறித்த தொகை பணம் நேரடியாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த சனிக்கிழமை உயிரிழை அமைப்பின் பயனாளியாக உள்ள முள்ளாதண்டுவடம் பாதிப்பிற்குள்ளான சகோதரி ஒருவரின் மகனது கல்வி செயற்பாட்டிற்கு உறுதுணையாக துவிச்சக்கரவண்டி ஒன்று (பெறுமதி - 17,300/-) வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் உதவியை விசேட தேவைப்பாடுடைய குறித்த பயனாளிகளுக்கு வழங்கிவைப்பதற்கு மதிவாணன் (Mathi Suddy) ஏற்பாடுகளை மேற்கொண்டார்..






உயிரிழை பராமரிப்பு இல்ல பயனாளிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபா உதவி வழங்கிவைப்பு......!! உயிரிழை பராமரிப்பு இல்ல பயனாளிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபா உதவி வழங்கிவைப்பு......!! Reviewed by Mankulam News on 4/18/2019 09:06:00 am Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.