கடந்த மார்ச் 16ம் திகதியன்று மாஙகுளம் உயிரிழை அமைப்பின் பராமரிப்பு இல்ல பயனாளிகளின் உணவுத் தேவைகளுக்காகவும் மற்றும் அதனோடு இணைந்த சிறிய வாழ்வாதார முயற்சியாகவும் அவுஸ்திரேலியாவில் வாழும் திரு.ஈசன் அவர்களினால் சுமார் 100 கோழிகளை வளர்க்க கூடிய கோழிக் கூடு அமைத்து வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இந்த கூட்டில் நல்ல இன நாட்டுக்கோழிகளை வாங்கி வளர்ப்பதற்காக திரு.ஈசன் ஊடாக அவரது நண்பர்கள் உயிரிழை அமைப்பிற்கு பணம் வழங்கப்பட்து.
1. திரு.சக்திதாசன் கவிதா துன்னாலை யாழ்ப்பாணம் 15000.00 ரூபா
2.திரு.அகிலன் யூலி குடும்பம் பிரான்ஸ் 25000.00 ரூபா
3.சிவஜோகராஜா மட்டுவில் தெற்கு சாவகச்சேரி 40000.00 ரூபா
மொத்தமாக 80000.00 ரூபாய் உயிரிழை அமைப்பின் பராமரிப்பு இல்ல பயனாளிகளின் கணக்கு இலக்கத்துக்கும் மற்றும் நேரடியாகவும் வந்து வழங்கினர். அதற்கமைவாக நல்ல வகையான நாட்டுக்கோழிகள் 50 கோழிகள் வாங்கப்பட்டுள்ளது.
மாங்குளம் உயிரிழை பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது........!!
Reviewed by Mankulam News
on
3/31/2019 04:44:00 pm
Rating:
No comments: