புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உள்ள பிரதேச சபை உறுப்பினர்களில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 11 பேரை தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் மக்களின் அபிவிருத்திப் பணியில் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் இந்த ஆண்டுக்கான மார்ச் மாத அமர்வு கடந்த 14-03-2019 வியாழக்கிழமை பிரதேச சபை தவிசாளர் திரு.செ.பிறேமகாந் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன் போது தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 11 பேரும் ஏனை கட்சிகளின் உறுப்பினர்கள் 11 பேரும் பிரசன்னமாகியுள்ள நிலையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் செயற்பாடு தொடர்பில் ஏனைய கட்சி உறுப்பினர்கள் 11 பேரும் விசனம் தெரிவித்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் வீதி அபிவிருத்தி மற்றும் மின்விழக்கு பொருத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு ஏனைய கட்சி உறுப்பினர்கள் எவருக்கும் அறிவிக்கப்படாது அவர்களின் வட்டாரத்திற்கு செல்லும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாங்களே இந்த அபிவிருத்தி வேலைகளை ஏனைய கட்சி உறுப்பினர்களை அழைக்காமல் அவர்களே செய்வதாக மக்களுக்கு கூறி வட்டாரத்தினை சேர்ந்த முன்மொழிவுகளை புறந்தள்ளி செயற்படுவதாக ஏனைய கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
இது தொடர்பில் சபை கதைக்க முயற்சிக்கும் போது சபையில் வைத்து தவிசாளரின் சொல்லிற்கு கட்டுப்பட்டு அமர்ந்து சபை நேரத்தினை இழுத்தடிப்பு செய்து சபையினை நிறைவு செய்கின்றார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்களின் ஆட்சியா அங்கு நடைபெறுகின்றது என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சுதர்சன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் முகுந்தகஜன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உறுப்பினரின் கருத்தை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் மாற்றத்திற்காக
இளைஞர் அணி , சிறீலங்கா சுதந்திரகட்சி , ஜக்கிய தேசியகட்சி தமிழ்தேசிய மக்கள் முன்னணி , தமிழர் விடுதலை கூட்டணி , ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் 11 பேர் இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் கூட்டமைப்பின் ஆட்சியா....? - உறுப்பினர்கள் கேள்வி...........!!!
Reviewed by Mankulam News
on
3/16/2019 07:46:00 pm
Rating:
No comments: