ஏதாவது சந்தேகம் என்றாலோ அல்லது ஏதாவது ஒன்றை பற்றி தெரியவில்லை என்றால், குருவிடம் கேட்ட காலம் போய் கூகுளிடம் கேட்டு குருவையே கேள்வி கேட்டு மடக்கும் காலம் இது. முன்பெல்லாம் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் அறிய என்சைக்லோபிடியாவை புரட்டியது போய், மொபலை எடுத்து கூகுளை கேட்டு விடுகிறோம்.
யாஹூ, பிங் என பல தேடுபொறிகள் இருந்தாலும், கூகுளை அதிகம் பயன்படுத்த காரணம் அதன் எளிமை யான வடிவமைப்பு மற்றும் துல்லியமான பதில்களே. சமூக வலைதளங்கள், விளையாட்டு, அரசியல் என தினமும் கோடிக்கணக்கான தேடல்கள். அப்படி என்ன தான் நம் மக்கள் தேடுகிறார்கள் என பார்ப்போமா..
பேஸ்புக் (Facebook)
உலகின் மிகப்பெரிய சமூகவலைதளமான பேஸ்புக், உலகத்தை சுருக்கி உள்ளங்கையில் வைத்தது போல், எந்த மூலையில் என்ன நடந்தாலும் உடனுக்குடன் அனைவருக்கும் சென்று சேர்க்கிறது. என்னதான் மொபைல் செயலிகள் மூலம் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டாலும், கூகுளில் தேடும் வார்த்தைகளில் முதலிடமும் இதற்கு தான். மாதத்திற்கு சராசரியாக 214கோடி தடவை கூகுளில் தேடப்படுகிறதாம் பேஸ்புக்.
பெரும்பாலும் வீடியோக்கள் பார்ப்பதற்கு பல்வேறு தளங்கள் இருந்தாலும், எல்லா விதமான வீடியோக்களையும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கு யூடியூப் மட்டுமே உள்ளது. எனவே, யூடியூப் மாதம் சராசரியாக 168கோடி தேடல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதிலும் உலகத்திலேயே அதிகமாக யூடியூப் பார்ப்பதில் 3ம் இடம் தமிழ்நாட்டு தான்!!
என்னதான் கூகுள் க்ரோம் உலாவி மற்றும் கூகுள் செயலிகளின் முகப்பு பக்கத்திலேயே கூகுள் தேடுபொறி இருந்தாலும், அதிலும் கூகுளை தேடி "Google.in" சென்று நமக்கு தேவையான ஒன்றை தேடுவது தானே நம்ம பழக்கம்! அதனால் தான் 92 கோடி தேடல்களுடன் மூன்றாம் இடம்.
ஹாட் மெயில் ( Hot Mail)
அமேசான் (Amazon)
ஜிமெயில் (Gmail)
என்னதான் பேஸ்புக் மெசஞ்சர் , வாட்ஸ்ஆப் என செயலிகள் வந்தாலும், மின்னஞ்சலுக்கான மவுசு இன்னும் குறையவில்லை. மற்றவற்றை காட்டிலும் இது மிகவும் பாதுகாப்பானது மட்டுமின்றி, அனைத்து தளங்களிலும் பயன்படுத்த எளிதானது. அலுவலக ரீதியாக மின்னஞ்சல் அனுப்ப யாஹூ, அவுட்லுக் என நிறைய இருந்தாலும் ஜிமெயில் தான் டாப். மாதம் சராசரியாக 50கோடி தேடல்களாம்.
விக்கிபீடியா (Wikipedia)
தேடுபொறியான கூகுள் நமக்கு தகவல்களை தேடிஎடுத்து தான் தரமுடியும். அந்த தகவல்களை கொண்டுள்ள மிகப்பெரிய தகவல்களஞ்சியம் தான் விக்கிபீடியா.விக்கி பீடியா இணையதளத்தில் உள்ள தகவல்கள் உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளில் இடம் பெற்றுள்ளன. ஆனால், விக்கி பீடியா தளத்தில் உள்ள தகவல்களை யார் வேண்டுமானாலும் சென்று எளிதாக மாற்ற முடியும் என்பது இதில் உள்ள ஒரு குறைபாடு ஆகும்.இது கூகுள் தேடலில் ஐந்தாம் இடம் பிடிக்கிறது.
மின்னஞ்சல் அனுப்ப, ஜிமெயிலுக்கு அடுத்தப்படியாக பயன்படுத்தப்படுவது இதுதான். இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படாவிட்டாலும் , உலகம் முழுதும் பரவலான உபயோகிப்பதால், இதற்கு எட்டாம் இடம்.
உலகம் முழுதும் பல்வேறு வர்த்தக இணையதள பயன்படுத்தப்பட்டாலும், அனைத்து நாடுகளிலும் பரவலாக அறியப்படும் வர்த்தகதளம் அமேசான் ஆகும். கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதை எளிமையாக்கி, இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே ஷாப்பிங் செய்ய முடிவதால் அமேசானுக்கு, அதிக தேடப்படும் வார்த்தையில் ஒன்பதாவது இடம்.
டிரேன்ஸ்லேட்டர் (Translator)
உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. அவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், மொழி பெயர்ப்பு செய்வது என்பது இன்றி அமையாதது. அதற்காக கூகுள் மூலம் டிரேன்ஸ்லேட் என்னும் வார்த்தை அதிகம் தேடப்படுகிறது.மொழிகளை மாற்றம் செய்வதற்கு மட்டுமின்றி, ஆடியோ , வீடியோ பைல்களை கூட வேறு வகை பைலாக மாற்றவதற்கு இவை அதிகம் தேவைபடுவதால், இந்த வார்த்தை கூகுளில் அதிகம் தேடப்படுகிறது. இதற்கு பத்தாவது இடம்.
மேப்ஸ் (Maps)
கூகுள் உலாவி ( browser ) மற்றும் தனியாக ஆண்ட்ராய்டு மொபைல் போன்களின் செயலியே இருந்தாலும் , கூகுள் தேடு பொறியின் மூலம் அதிகம் தேடப்படும் வார்த்தையாக உள்ளது. இந்த கூகுள் மேப் தளம் மூலம் இடங்களை தேடுவதற்கும், அதை சென்றடைய வழிகாட்டியாகவும் இருக்கிறது. மேலும் தற்போது இதில் கூடுதல் வசதியாக ஒரு இடத்தில் உள்ள போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்கள் கூட எளிதாக பெறும் வகையில் உள்ளது. எனவே, இது கூகுளில் அதிகம் தேடப்படும் வார்த்தையாக உள்ளது.
கூகுளில் அதிகம் தேடப்படுபவை எவை தெரியுமா?
Reviewed by Mankulam News
on
1/03/2019 09:14:00 pm
Rating:
No comments: