Seo Services

கூகுள் மேப்ஸில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பலாம் ...

கூகுள் நிறுவனம் நவீன யுகத்திற்கு ஏற்ப தன்னை புதுப்பித்து மக்களுக்கு தேவையான இணையதள வசதியை, தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பயனுள்ளதாக,  எளிமையாக்கி தருகிறது.
 
அந்த வரிசையில் கூகுள் மேப்ஸ் பற்றிய பயன் எல்லோருக்கும் தெரியும்.  இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் சொமேட்டொ உணவு விற்னையாளர்கள் வரை அனைவரின் நேரத்தைச் சிக்கனப்படுத்தி உரிய இடத்திற்கு விரைந்து போக இந்த செயலி உதவுகிறது.
 
தற்போது கூகுள் மேப்ஸில் இருந்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த குறுந்தகவல் அனுப்ப முடியாது. இது வியாபார மையங்கள் மட்டுமே குறுந்தகவல் வசதியை பயன்படுத்த முடியும் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஸ்கிரீன் ஷாட்டுகளில் கூகுள்மேப்ஸ் நிறுவனத்தை இதன் பயனாளர்கள் தொடர்பு கொள்ள முடியும் என தெரிகிறது.
 
வியாபார நிறுவனங்கள் இவ்வசதியின்  மூலம் தம் வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்க்கலாம். வாடிக்கையாளர்களையும், மிகவிரைவில் தொடர்பு கொள்ளலாம் என்பது இதன் சிறப்பம்சம்.
 
அதுமட்டுமின்றி கூகுள் மேப்ஸில்  பயணக் கட்டண வசதியும் உள்ளது. இது டெல்லி போக்குவரத்துத்துறை போலீஸார் வழங்கும் அதிகாரப்பூர்வ வரைபடத்தை வைத்தே டெல்லி கூகுள்மேப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் மேப்ஸில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பலாம் ... கூகுள் மேப்ஸில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பலாம் ... Reviewed by Mankulam News on 1/03/2019 07:36:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.