Seo Services

புகையிரதத்தில் நிவரணப் பொருள்கள் முல்லை மாவட்ட அரசாங்க அதிபரிடம் மாங்குளத்தில் கையளிப்பு!



கொழும்பிலிருந்து இன்று மதியம் 2 மணியளவில் கொண்டுவரப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்களின் ஒரு தொகுதி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கைளிக்கப்பட்டது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் டகளஸ் தேவானந்தா , முல்லைத்திவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மேலதிக மாசட்ட செயலாளர் கோ.தனபாலசுந்தரம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன் உள்ளிட்ட பல்வேறு அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

பொருட்களை அனுப்பிவைத்தவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்ததோடு வழங்கப்பட்ட பொருட்களை பகிர்ந்தளிக்ல நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.


நிவாரணப் பொருட்களை ஏற்றிச்செல்வதற்காக இராணுவத்தினரின் நான்கு (4) கனரக வாகனங்கள் மாங்குளம் புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனல் புகையிரதத்திலிருந்து இறக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிச்செல்வதற்கு ஒரு வாகனம் போதுமானதாக இருக்கும் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆயி­ரத்து 400 கிலோ அரி­சி­யும், 20 பொதி தண்­ணீர்ப் போத்­தல்­க­ளும் எடுத்து வரப்­பட்­டன. இதன் பெறு­மதி 3 லட்­சம் ரூபா என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதி­க­ள­வி­லான உத­விப் பொருள்­கள் கொண்டு வரப்­ப­டும் என்ற எதிர்­பார்ப்­பில் சென்ற அதி­கா­ரி­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஆகி­யோர் ஏமாற்­ற­ம­டைந்­த­னர்.
‘5 கிலோ அரி­சிப் பொதி­யில் 250, 10 கிலோ அரி­சிப் பொதி­யில் 7, 25 அரி­சிப் பொதி­யில் ஒன்று, 15 பொதி தண்­ணீர்ப் போத்­தல்­கள் மற்­றும் பாடக் கொப்­பி­கள் 12 டசின் எம்­மி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது’ என்று முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­லர் திரு­மதி ரூப­வதி கேதீஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.








புகையிரதத்தில் நிவரணப் பொருள்கள் முல்லை மாவட்ட அரசாங்க அதிபரிடம் மாங்குளத்தில் கையளிப்பு! புகையிரதத்தில் நிவரணப் பொருள்கள் முல்லை மாவட்ட அரசாங்க அதிபரிடம் மாங்குளத்தில் கையளிப்பு! Reviewed by Mankulam News on 1/01/2019 05:52:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.