Seo Services

வெள்ள அனர்த்தத்தால் அழிவடைந்த பயிர் நிலங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் நேற்று (2019/01/07) ஆரம்பம்!



வடமாகாணத்தின் சில மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பயிர் நிலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யும் பணிகள் நேற்று (2019/01/07) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப் பணிகளில் விவசாய அமைச்சின் அதிகாரிகளும் காப்புறுதி அதிகாரிகளும் ஈடுபடுவார்கள் என விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

உர நிவாரண திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏற்கனவே காப்புறுதி திட்டத்தில் இணைந்து கொண்டமையினால் அதனூடாக நஷ்டஈட்டு கொடுப்பனவுகள் வழங்கவும் நடவடிகவகை எடுக்கப்படும் என்றும் கலாநிதி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் ஒரு (1) ஹெக்டர் பயிர் நிலத்திற்கு நாற்பதாயிரம் ரூபா (ரூ.40,000) நஷ்டஈடு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ள அனர்த்தத்தால் அழிவடைந்த பயிர் நிலங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் நேற்று (2019/01/07) ஆரம்பம்! வெள்ள அனர்த்தத்தால் அழிவடைந்த பயிர் நிலங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் நேற்று (2019/01/07) ஆரம்பம்! Reviewed by Mankulam News on 1/08/2019 07:32:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.