Seo Services

இன்று மாங்குளத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விஜயம்.



இன்று (2018/12/31) மாங்குளத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வருகைதந்திருந்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கப்பட்டது.

மாங்குளம் மாதர் அபிவிருத்தி சங்கத்தினர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்கதி ஆனந்தன் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் மாஙகுளம் துணுக்காய் வீதியில் தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரை கல்விகற்கும் மாணவர்களுக்கான பாடசாலை கொப்பிகள் இன்று காலை 11 மணியளவில் மாஙகுளம் துணுக்காய் வீதியில் அமைந்துள்ள பாலர் பாடசாலையில் வழங்கிவைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் முருகானந்தமூர்தி நிரூபன் , மாங்குளம் மாதர் அபிவிருத்தி சங்க தலைவி வி.ஜானகி , மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


நிகழ்விலே, M.P சிவசக்தி ஆனந்தன் ,
கிராம அபிவிருத்தி சங்க தலைவர் முருகானந்தமூர்தி நிரூபன் மற்றும் மாங்குளம் மாதர் அபிவிருத்தி சங்க தலைவி ஜானகி ஆகியோரும் உரையாற்றினார்கள்.


வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி காணொலியாக இணைக்கப்பட்டுள்ளது.


மெலும் M.P சிவசக்தி ஆனந்தன் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கலாம் சிறப்பாக அமைய வேண்டும் என்றும் நாளை பிறக்கவிருக்கும் புதுவருடம் சமாதானம் நிலவ வேண்டும் என்றும் கூறினார்

















இன்று மாங்குளத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விஜயம். இன்று மாங்குளத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விஜயம். Reviewed by Mankulam News on 12/31/2018 02:36:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.