Seo Services

வடபகுதி மக்களுக்கு ஓர் நற்செய்தி….இனி இவற்றைப் பெறுவதற்கு கொழும்பிற்கு செல்லத் தேவையில்லை….!!


இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியோனி குணதிலக்க தெரிவித்துள்ளார்.நாடளாவிய ரீதியில் உள்ள 331 பிரதேச செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள கிளைக் காரியாலயங்கள் ஊடாக இவை விநியோகிக்கப்படவுள்ளன.

பிரதேச செயலகங்களில் ஒப்படைக்கப்படும் விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலமாக கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதன் மூலம் மீண்டும் பிரதேச செயலகம் மூலம் இவ்வடையாள அட்டை விநியோகிக்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளைப் பெறுவதற்காக கொழும்புக்கு வருவதனை குறைக்கும் நோக்கிலேயே பிரதேச மட்டத்தில் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை, கடவுச்சீட்டை மாவட்டச் செயலகங்கள் ஊடாக வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

கடவுச்சீட்டை பெறுவதற்காக மக்கள் கொழும்பிற்கு சமூகமளித்து அலைவதை தடுக்கும் நோக்குடன் மாவட்ட மட்டத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள கிளைக் காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிளை அலுவலகங்கள் ஊடாக ஒன்லைன் மூலமாக, கொழும்பில் உள்ள தலைமை காரியாலயத்துக்கு அனுப்பி வைப்பதன் மூலம் மாவட்டச் செயலகங்கள் மூலம் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படவுள்ளன.

தற்போது சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்கள் மட்டும் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தால் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடபகுதி மக்களுக்கு ஓர் நற்செய்தி….இனி இவற்றைப் பெறுவதற்கு கொழும்பிற்கு செல்லத் தேவையில்லை….!! வடபகுதி மக்களுக்கு ஓர் நற்செய்தி….இனி இவற்றைப் பெறுவதற்கு கொழும்பிற்கு செல்லத் தேவையில்லை….!! Reviewed by Mankulam News on 2/05/2019 09:37:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.